/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'அதிக ஓட்டு வித்தியாசத்தில் வேட்பாளரை ஜெயிக்க வைக்கணும்'
/
'அதிக ஓட்டு வித்தியாசத்தில் வேட்பாளரை ஜெயிக்க வைக்கணும்'
'அதிக ஓட்டு வித்தியாசத்தில் வேட்பாளரை ஜெயிக்க வைக்கணும்'
'அதிக ஓட்டு வித்தியாசத்தில் வேட்பாளரை ஜெயிக்க வைக்கணும்'
ADDED : மார் 19, 2024 09:22 PM
காஞ்சிபுரம்,:இண்டியா கூட்டணி கட்சி வேட்பாளருக்கு, காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில், அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என, கூட்டணி மா.செ., கூட்டத்தில், தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இண்டியா கூட்டணியைச் சேர்ந்த மாவட்ட செயலர் கூட்டம் காஞ்சிபுரத்தில் நடந்தது.
காஞ்சிபுரத்தில் நடந்த கூட்டணி கட்சி மாவட்ட செயலர் கூட்டத்திற்கு, காஞ்சிபுரம் தி.மு.க., தெற்கு மாவட்ட செயலரும், உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் தலைமை வகித்தார்.
பாசிசத்தை ஒழிக்கும் வகையில், இண்டியா கூட்டணி கட்சி வேட்பாளருக்கு, காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில், அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மார்ச் -22ம் தேதி காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் ஆகிய இரு தொகுதிகளுக்கும், தனித்தனியாக காஞ்சிபுரம் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற உள்ளது.
மார்ச் -23ம் தேதி மதுராந்தகம், செய்யூர் ஆகிய இரு தொகுதிகளுக்கும் தனித்தனியாக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற உள்ளது என, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் தி.மு.க.,- மாவட்ட துணை செயலரும், காஞ்சிபுரம் எம்.பி.,யுமான செல்வம் மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

