/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
1,000 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள்
/
1,000 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள்
ADDED : மார் 31, 2025 11:53 PM
வாலாஜாபாத், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, வாலாஜாபாத் பேரூராட்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. வாலாஜாபாத் பேரூராட்சி தி.மு,க., செயலாளர் பாண்டியன் தலைமையில் இந்நிகழ்ச்சி நடந்தது.
வாலாஜாபாத் பேரூராட்சி 4வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் வெங்கடேசன் ஏற்பாட்டில், குழந்தைகளுக்கு கல்வி நிதி. விளையாட்டு உபகரணப் பொருட்கள் மற்றும் 1,000 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள், வேட்டி, சேலை உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் ஆகியோர் பங்கேற்று இந்நலத் திட்ட உதவிகளை வழங்கினர்.
முன்னதாக 4வது வார்டு மற்றும் 5வது வார்டு பகுதிகளில், பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் அளிக்கப்பட்டன.