/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மனநலம் பாதித்தோருக்கு நலத்திட்ட உதவிகள்
/
மனநலம் பாதித்தோருக்கு நலத்திட்ட உதவிகள்
ADDED : டிச 14, 2025 05:34 AM
உத்திரமேரூர்: பழவேரி, ராமகிருஷ்ணா மிஷன் மடத்தில் மாற்றுத்திறனாளி மற்றும் மனநலம் பாதித்தோருக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
உத்திரமேரூர் ஒன்றியம், பழவேரி கிராமத்தில், ராமகிருஷ்ணா மிஷன் துவங்கப்பட்டு பொது மருத்துவ முகாம், கண் சிகிச்சை முகாம் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதன் ஒரு பகுதியாக மாதந்தோறும் மாற்றுத்திறனாளி மற்றும் மனநலம் பாதித்தோருக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
அதன்படி, இந்த மாதத்திற்கான நலத்திட்ட உதவி வழங்குதல் நிகழ்ச்சி ராமகிருஷ்ணா மிஷன் மற்றும் தமிழ்நாடு மக்கள் மனநல அமைப்பு, லயன்ஸ் சங்கம் சார்பில் நேற்று நடந்தது. 10 கிலோ அரிசி, மளிகைப் பொருட்கள், போர்வை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் 130 பேருக்கு வழங்கப்பட்டன.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து வந்த மாற்றுத்திறனாளி மற்றும் மனநலம் பாதித்தோர், நிகழ்ச்சிக்கு வர சக்தியற்ற மாற்றுத்திறனாளியின் பெற்றோர் என 200க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.

