/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
30 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
/
30 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
ADDED : ஆக 06, 2025 02:21 AM
உத்திரமேரூர்:-எடமிச்சி கிராமத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் அமைச்சர் காந்தி பங்கேற்று, 30 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
உத்திரமேரூர் தாலுகா, எடமிச்சி கிராமத்தில் நேற்று நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமிற்கு, எடமிச்சி ஊராட்சி தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார்.
உத்திரமேரூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர், ஒன்றியக் குழு துணைத் தலைவர் வசந்தி, சாலவாக்கம் ஊராட்சி தலைவர் சத்யா முன்னிலை வகித்தனர்.
தமிழக கைத்தறி துறை அமைச்சர் காந்தி பங்கேற்று முகாமை துவக்கி வைத்தார். இந்த முகாமில், அண்ணாத்துார், பொற்பந்தல், எடமிச்சி, சாலவாக்கம், சித்தனக்காவூர், சிறுபினாயூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தோர் பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
தகுதி வாய்ந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, 30 பயனாளிகளுக்கு அமைச்சர் காந்தி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த முகாமில் மொத்தம் 1,100 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.