/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கால்வாய் அமைப்பது எப்போது? கவுன்சிலர் கூட்டத்தில் கோரிக்கை
/
கால்வாய் அமைப்பது எப்போது? கவுன்சிலர் கூட்டத்தில் கோரிக்கை
கால்வாய் அமைப்பது எப்போது? கவுன்சிலர் கூட்டத்தில் கோரிக்கை
கால்வாய் அமைப்பது எப்போது? கவுன்சிலர் கூட்டத்தில் கோரிக்கை
ADDED : ஜன 30, 2025 11:40 PM
வாலாஜாபாத், வாலாஜாபாத் ஒன்றிய கவுன்சிலர்களுக்கான மாதாந்திர கூட்டம், வாலாஜாபாத் பி.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று நடந்தது.
வாலாஜாபாத் ஒன்றியக் குழு தலைவர் தேவேந்திரன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், துணை தலைவர் சேகர் மற்றும் ஒன்றியத்திற்கு உட்பட்ட வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், வரவு - செலவு கணக்கு வாசிக்கப்பட்டு, பொது நிதியின் கீழ் பணிகள் தேர்வு செய்வது குறித்து தீர்மானிக் கப்பட்டது. கட்டவாக்கம் ஊராட்சியில் இளைஞர்கள் நலன் காக்கும் வகையில், புதிதாக உடற்பயிற்சி கூடம் ஏற்படுத்த வேண்டும் என, அப்பகுதி தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் சஞ்சீவ்காந்தி வலியுறுத்தினார்.
புத்தகரம் கிராமத்தில், கொளக்கியம்மன்கோவிலில் தேர் திருப்பணி விரைவில் நிறைவு பெற உள்ளதால், திருவிழாவின் போது பஜனை கோவில் தெரு மற்றும் குறுக்கு தெரு பகுதிகளில், தேர் சென்று வர ஏதுவாக பழுதான சாலைகளைகான்கிரீட் சாலையாகசீரமைக்க வேண்டும் என, அப்பகுதி அ.தி.மு.க.,ஒன்றிய கவுன்சிலர்நாகராஜ் வலியுறுத்தி பேசினார்.
வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு வார்டுகளில் குடிநீர், சாலை மற்றும் மழைநீர் வடிகால்வாய் வசதி ஏற்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து கவுன்சிலர்கள் கோரினர்.
இந்த கோரிக்கைகளுக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, வாலாஜாபாத்வட்டார வளர்ச்சிஅலுவலர் வரதராஜன் தெரிவித்தார்.