/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
எல்லப்பா அவென்யூவில் கால்வாய் வசதி எப்போது?
/
எல்லப்பா அவென்யூவில் கால்வாய் வசதி எப்போது?
ADDED : ஜன 07, 2025 11:52 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, 10வது வார்டு எல்லப்பன் அவென்யூ, முல்லை நகரில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் பாதாள சாக்கடை மற்றும் மழைநீர் வடிகால்வாய் வசதி ஏற்படுத்தப்படவில்லை.
இதனால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மழைநீருடன் கலந்து சாலையில் குளம்போல தேங்கியுள்ளது. தற்போது, சகதி நீராக மாறியுள்ளதால், நடந்து செல்வோரின் கால்களில் அரிப்பு ஏற்பட்டு சருமநோய் பிரச்னை ஏற்படுகிறது.
இத்தெரு வழியாக மாநகராட்சி துவக்கப் பள்ளிக்கு செல்லும் மாணவ- - மாணவியர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, எல்லப்பன் அவென்யூ, முல்லை நகரில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.