/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஜல்லி பெயர்ந்த சாலை சீரமைப்பது எப்போது?
/
ஜல்லி பெயர்ந்த சாலை சீரமைப்பது எப்போது?
ADDED : ஏப் 16, 2025 01:07 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், மேனலுார் ஊராட்சியில் பாரதிபுரம் துணை கிராமம் உள்ளது. இந்த துணை கிராமத்தில் 1,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு, பொதுமக்களின் போக்குவரத்துக்காக இருபது ஆண்டுகளுக்கு முன், சுண்ணாம்பு கப்பிச்சாலை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.
தற்போது, சாலை முறையாக பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து, ஜல்லிகள் பெயர்ந்த நிலையில் உள்ளது.
இந்த சாலையின் வழியே வாகன ஓட்டிகள் செல்லும்போது, பெயர்ந்து கிடக்கும் ஜல்லியில் சிக்கி, கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
மேலும், மழை நேரங்களில் வாகன ஓட்டிகள் அவ்வழியே செல்லும்போது மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க, ஊரக வளர்ச்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, வேண்டமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.