/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உபரித்தொகை ரூ.26 கோடி இருந்தும் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யாதது ஏன் எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை சரமாரி கேள்வி

ADDED : செப் 18, 2024 11:49 PM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம், ஸ்ரீபெரும்புதுார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஸ்ரீபெரும்புதுார் ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். பி.டி.ஓ., பவாணி, ஒன்றிய குழு துணை தலைவர் பங்கேற்றனர்.
ஸ்ரீபெரும்புதுார் எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். கூட்டம் துவங்கியதும் வரவு - செலவு கணக்கை வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் வளவன் வாசித்தார்.
பின்னர், செல்வப்பெருந்தகை ஒரு சில கணக்குகளை சுட்டி காட்டி, உபரித்தொகை எவ்வளவு உள்ளது என கேட்டார். அதற்கு, 26 கோடி ரூபாய் இந்தியன் வங்கியில் உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வல்லக்கோட்டை போகும் வழியில் சாலை சரியில்லை, குடிநீர் வசதி இல்லை, ஆங்காங்கே எந்த வளர்ச்சி பணிகளும் நடக்கவில்லை, அங்கெல்லாம் பிரிச்சு கொடுக்காமல், 26 கோடி ரூபாய் சும்மா வச்சிருக்கிங்க என, அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
அவரது கேள்விக்கு பதலளிக்க முடியாமல் மேலாளர் வளவன் நின்றார். இக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் பலர் பங்கேற்றனர்.