/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கணவர் கழுத்து நெரித்து கொலை கள்ளக்காதலனுடன் மனைவி கைது
/
கணவர் கழுத்து நெரித்து கொலை கள்ளக்காதலனுடன் மனைவி கைது
கணவர் கழுத்து நெரித்து கொலை கள்ளக்காதலனுடன் மனைவி கைது
கணவர் கழுத்து நெரித்து கொலை கள்ளக்காதலனுடன் மனைவி கைது
ADDED : ஜன 08, 2024 05:29 AM

ஊத்துக்கோட்டை, : கள்ளக்காதலனுடன் சேர்ந்து போதையில் கணவரை கொலை செய்து விட்டு, காட்டில் பிணமாக கிடந்ததாக நாடகமாடிய பெண் மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே, பென்னலுார்பேட்டை மேட்டுக் காலனியில் வசித்து வந்தவர் சீனிவாசன், 43. கூலி வேலை செய்து வந்தார். திருமணமாகி மனைவி பிரிந்து சென்று விட்டார்.
தகராறு
இவரது இரண்டாவது மனைவி நந்தினி, 29. ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், துாய்மைப் பணியாளராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 3ம் தேதி இரவு, சீனிவாசன் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். பின் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
அவரை தேடி சென்றபோது, வள்ளுவர் நகர் பகுதி காட்டிற்கு செல்லும் வழியில் தன் கணவர் பிணமாக கிடந்ததாக நந்தினி, பென்னலுார்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
போலீசார் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார், சந்தேகத்தின்படி, நந்தினியிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். தொடர் விசாரணையில் தனக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி குமரன், 24, என்பவருக்கும், இடையே கள்ளத் தொடர்பு இருந்தது. இது என் கணவருக்கு தெரிந்து தகராறு செய்து வந்தார்.
சிறையில் அடைப்பு
இதனால் கணவரை 3ம் தேதி இரவு, வள்ளுவர் நகர் காட்டு பகுதிக்கு நான் மற்றும் குமரன் அழைத்து சென்று அங்கு மது அருந்தினோம்.
பின் போதையில் இருந்த கணவர் சீனிவாசனின் கழுத்தை இருவரும் சேர்ந்து துணியால் இறுக்கி கொலை செய்தோம் என, போலீசாரிடம் நந்தினி தெரிவித்தார்.
அதை தொடர்ந்து போலீசார் நேற்று, நந்தினி, குமரன் ஆகிய இருவரையும் கைது செய்து, ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.