/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
d/c பைக் மீது கன்டெய்னர் மோதி மனைவி பலி; கணவர் காயம்
/
d/c பைக் மீது கன்டெய்னர் மோதி மனைவி பலி; கணவர் காயம்
d/c பைக் மீது கன்டெய்னர் மோதி மனைவி பலி; கணவர் காயம்
d/c பைக் மீது கன்டெய்னர் மோதி மனைவி பலி; கணவர் காயம்
ADDED : ஜூலை 30, 2025 12:29 AM
பூந்தமல்லி, பூந்தமல்லி அருகே, பைக் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில், மனைவி சம்பவ இடத்திலேயே பலியானார். கணவர் காயமடைந்தார்.
பூந்தமல்லி அருகே உள்ள திருமழிசையை சேர்ந்தவர் ராமு, 57. இவரது மனைவி உஷா, 47. இருவரும், நேற்று முன்தினம் இரவு, பூந்தமல்லியில் உள்ள பெருமாள் கோவிலில் தரிசனம் செய்து, 'ஸ்பிளண்டர்' பைக்கில் வீட்டிற்கு சென்றனர்.
சென்னை- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதியை கடந்து சென்ற போது, பின்னால் வேகமாக வந்த கன்டெய்னர் லாரி, அவர்களின் பைக் மீது மோதியது.
இதில், இருவரும் பைக்கில் இருந்து கீழே விழுந்தனர். தலையில் பலத்த காயமடைந்த உஷா, சம்பவ இடத்திலேயே பலியானார். ராமு காயங்களுடன் உயிர் தப்பினார்.
தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்தை ஏற்படுத்திய கன்டெய்னர் லாரி ஓட்டுநரான, ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சோயப் அக்தர், 28, என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.