/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மனைவி கத்தியால் குத்தி கொலை 'சந்தேக' கணவர் வெறிச்செயல்
/
மனைவி கத்தியால் குத்தி கொலை 'சந்தேக' கணவர் வெறிச்செயல்
மனைவி கத்தியால் குத்தி கொலை 'சந்தேக' கணவர் வெறிச்செயல்
மனைவி கத்தியால் குத்தி கொலை 'சந்தேக' கணவர் வெறிச்செயல்
ADDED : நவ 24, 2025 03:53 AM

படப்பை: படப்பையில், நடத்தையில் சந்தேகப்பட்டு, கத்தியால் குத்தி மனைவியை கொலை செய்த கணவரை, போலீசார் கைது செய்தனர்.
படப்பையை அடுத்த ஆதனஞ்சேரி, அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கங்காதரன், 36. ஓட்டுநர். அவரது மனைவி நந்தினி, 29. இவர்களுக்கு திருமணமாகி, 12 ஆண்டுகள் ஆகின்றன. கிரிஷ்குமார், 9, ஹரிசரண், 7, என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
மனைவியின் நடத்தையில் , கங்காதரனுக்கு சந்தேகம் ஏற்பட்டு, கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று மதியம், சாலமங்கலம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு நந்தினி சென்றார். போதையில் இருந்த கங்காதரன், மனைவியை தேடி சாலமங்கலத்திற்கு சென்று, அங்கு நந்தினியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, தகராறு முற்றி, இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள் ளது. ஒரு கட்டத்தில், ஆத்திரமடைந்த கங்காதரன், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து, மனைவியின் கழுத்தில் குத்தியுள்ளார்.
இதில், படுகாயமடைந்த நந்தினி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். போலீசார் விரைந்து வந்து, உடலை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக, படப்பை போலீசார் வழக்கு பதிந்து, கங்காதரனை கைது செய்து விசாரிக்கின்றனர்.

