ADDED : ஆக 31, 2025 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் செவிலிமேடு, அதியமான் நகரில் உள்ள மனவளக்கலை மன்ற அறக்கட்டளை அறிவு திருக்கோவில் சார்பில் மனைவி நல வேட்பு தின விழா நடந்தது
காஞ்சிபுரம் மனவளக் கலை மன்ற அறக்கட்டளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற சென்னை ராதா நகர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை செயலர் பேராசிரியர் கணேசன், பேராசிரியர் பத்மாவதி கணேசன் ஆகியோர் வேதாத்திரி மகரிஷியை நினைவு கூர்ந்து பேசினர்.
மேலும், குடும்பத்தை சிறப்பாக வழி நடத்துவதில் பெண்கள் பங்களிப்பின் அவசியம் குறித்தும், மனைவி நல வேட்பு தின விழாவினை கொண்டாடப்படுவதின் சிறப்புகள் குறித்தும் பேசினர்.
அறக்கட்டளை பொருளாளர் செந்தில் நாயகம் நன்றி கூறினார்.

