/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புகார் பெட்டி உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்படுமா?
/
புகார் பெட்டி உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்படுமா?
புகார் பெட்டி உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்படுமா?
புகார் பெட்டி உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்படுமா?
ADDED : மார் 22, 2025 12:51 AM

காஞ்சிபுரம், செவிலிமேடு பாலாறு பாலத்தில் இருந்து கீழம்பி செல்லும் புறவழிச்சாலை உள்ளது. உத்திரமேரூர், வந்தவாசி உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து வேலுார், பெங்களூரூ, அரக்கோணம், சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள், காஞ்சிபுரம் நகருக்குள் செல்லாமல் கீழம்பி புறவழி சாலை வழியாக சென்று வருகின்றன.
கனரக வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இச்சாலையில், கீழ்கதிர்பூரில் இருந்து மேல்கதிர்பூர் செல்வோர் கீழம்பி புறவழி சாலையை கடந்து செல்ல வேண்டியுள்ளது. நான்கு முனை சாலை சந்திப்பான இப்பகுதியில், உயர்கோபுர மின்விளக்கு வசதி ஏற்படுத்தவில்லை.
இதனால், இரவு நேரத்தில் கீழ்கதிர்பூர், மேல்கதிர்பூரில் இருந்து, கீழம்பி புறவழிச்சாலையை கடக்கும் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, கீழ்கதிர்பூர், மேல்கதிர்பூர் செல்லும் சாலை இணையும் இடமான, நான்குவழிச் சாலை சந்திப்பில் விபத்தை தவிர்க்க உயர்கோபுர மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும்.
- கே.மேகநாதன்,
கீழ்கதிர்பூர்.