/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படுமா?
/
ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படுமா?
ADDED : செப் 23, 2024 05:48 AM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாநகராட்சியில் பிரதான சாலைகளில் ஒன்றாக, புத்தேரி தெரு எனப்படும் எஸ்.வி.என்., பிள்ளை தெரு உள்ளது. இச்சாலையில் கச்சபேஸ்வரர் கோவில், கைலாசநாதர் கோவில் ஆகியவை அமைந்துள்ளது.
இதனால், இச்சாலையில் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. எனவே, இப்பகுதி அன்றாடம் பரபரப்பாகவே காணப்படுகிறது.
நகரின் முக்கியமான இச்சாலையின் இரு புறமும் தனி நபர்கள் சிலர் காய்கறி, பழக்கடைகள் வைத்து ஆக்கிரமித்து உள்ளனர்.
கடைக்கு வருபவர்கள் வாகனங்களை சாலையிலே நிறுத்துகின்றனர். போக்குவரத்து நிறைந்து காணப்படும் இச்சாலையில், அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுகிறது.
வாகன நெரிசலால், அவ்வழியே குறித்த நேரத்திற்கு பள்ளி, கல்லுாரி, வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
இந்த சாலையின் இருபுறமும் நடைபாதை இல்லாததால் பாதசாரிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
மாநகராட்சிக்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள கமிஷனர் நவேந்திரன் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார்.
புத்தேரி தெரு ஆக்கிரமிப்பு கடைகள் மீது நடவடிக்கை எடுப்பார் என நகரவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.
போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினால், வாகன நெரிசல் அப்பகுதியில் பெருமளவில் குறையும்.