/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
செவிலிமேடு அனுஷ்டானகுளம் துார்வாரி சீரமைக்கப்படுமா?
/
செவிலிமேடு அனுஷ்டானகுளம் துார்வாரி சீரமைக்கப்படுமா?
செவிலிமேடு அனுஷ்டானகுளம் துார்வாரி சீரமைக்கப்படுமா?
செவிலிமேடு அனுஷ்டானகுளம் துார்வாரி சீரமைக்கப்படுமா?
ADDED : செப் 04, 2025 03:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:மண் திட்டுகளால் துார்ந்த, செவிலிமேடு அனுஷ்டானகுளத்தை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் செவிலிமேடில் ராமானுஜர் சன்னிதி எதிரில் அனுஷ்டான குளம் உள்ளது. ராமானுஜர் இக்குளத்தில் நீராடியதால் அனுஷ்டான குளம் என அழைக்கப்படுகிறது.
இக்குளம் மண் திட்டுகளால் துார்ந்த நிலையில் உள்ளது. இதனால், மழை காலத்தில் குளத்தில் சிறிதளவு மட்டுமே மழைநீர் தேங்குகிறது.
எனவே அனுஷ்டான குளத்தை துார்வாருவதோடு, குளத்தை சுற்றிலும் நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.