/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சிப்காட் பகுதியில் உள்ள ஏரிகளை துார்வார தொழிற்சாலைகள் முன்வருமா?
/
சிப்காட் பகுதியில் உள்ள ஏரிகளை துார்வார தொழிற்சாலைகள் முன்வருமா?
சிப்காட் பகுதியில் உள்ள ஏரிகளை துார்வார தொழிற்சாலைகள் முன்வருமா?
சிப்காட் பகுதியில் உள்ள ஏரிகளை துார்வார தொழிற்சாலைகள் முன்வருமா?
ADDED : ஜன 08, 2024 05:24 AM

இருங்காட்டுக்கோட்டை : ஸ்ரீபெரும்புதுார் அருகே 'சிப்காட்' பகுதியில் உள்ள ஏரிகளை தொழிற்சாலை 'சி.எஸ்.ஆர்'., நிதியின் கீழ் துார்வாரி சீரமைக்க முன்வர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில், இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதுார், பிள்ளைப்பாக்கம், வல்லம், ஒரகடம் ஆகிய ஐந்து இடங்களில் 'சிப்காட்' தொழிற் பூங்காக்கள் அமைந்துள்ளன.
இங்கு, 1,000த்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்குகின்றன.
தொழிற்சாலை நிர்வாகத்தினர் தங்களின் ஆண்டு வருமானத்தில் 2 சதவீதத்தை 'சி.எஸ்.ஆர்' எனப்படும் கூட்டாண்மை சமூக பொறுப்பு நிதியாக ஒதுக்கி, அதை சமூக பணிக்கு செலவிட்டு வருகின்றன.
இந்நிலையில், ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில் பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் 98 ஏரிகளும், ஊராட்சி ஒன்றிய நிர்வாக கட்டுப்பாட்டில் 84 ஏரிகள், 523 குளங்களும் உள்ளன.
இதில், மேற்கண்ட 'சிப்காட்' பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயம் கைவிடப்பட்டதால், அங்குள்ள ஏரிகள் பராமரிப்பின்றி துார்ந்து போய் உள்ளன.
எனவே, சிப்காட் பகுதியில் உள்ள ஏரி, குளம், குட்டையை தொழிற்சாலை நிர்வாகத்தினர் சி.எஸ்.ஆர்., நிதி வாயிலாக துார் வாரி ஆழப்படுத்த வேண்டும். இதனால், மழைக்காலத்தில் அதிகப்படியான நீரை சேமிக்க முடியும்.
இந்த நீரை தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிக்கு குடிநீர் அல்லாத பிற தேவைக்கு பயன்படுத்த முடியும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.