/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இளநகர் சாலை வளைவில் மின் கம்பம் அகற்றப்படுமா?
/
இளநகர் சாலை வளைவில் மின் கம்பம் அகற்றப்படுமா?
ADDED : நவ 25, 2024 01:24 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், இளநகர் கிராமத்தில், பெருநகர்- கலியாம்பூண்டி சாலை உள்ளது. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த கிராமத்தினர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இளநகர் கிராமத்தில், ஆபத்தான சாலை வளைவில், விபத்து ஏற்படுத்தும் வகையில் மின் கம்பம் உள்ளது. இந்த, வழியே இரவு நேரங்களில், செல்லும் வாகன ஓட்டிகள், மின் கம்பத்தில் மோதி விபத்தில் சிக்கி வருகின்றனர்.
மின் கம்பத்தை அகற்ற, மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இளநகர் கிராமத்தில், சாலை வளைவில் மின் கம்பம் இருப்பது குறித்து, அப்பகுதி மக்களிடமிருந்து புகார் வந்துள்ளது. விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள மின் கம்பத்தை விரைவில் அகற்றி, வேறொரு இடத்தில், புதிய கம்பம் நடப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.