/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புதிதாக ஊராட்சி அலுவலகம் அய்யம்பேட்டையில் அமையுமா?
/
புதிதாக ஊராட்சி அலுவலகம் அய்யம்பேட்டையில் அமையுமா?
புதிதாக ஊராட்சி அலுவலகம் அய்யம்பேட்டையில் அமையுமா?
புதிதாக ஊராட்சி அலுவலகம் அய்யம்பேட்டையில் அமையுமா?
ADDED : ஜன 21, 2025 06:30 PM
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது அய்யம்பேட்டை ஊராட்சி. அய்யம்பேட்டை ஊராட்சியில், தர்மராஜாபேட்டை, ராஜிவ்காந்தி நகர், அம்பேத்கர் நகர், பரமேஸ்வரன் காலனி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.
இப்பகுதியில், பல ஆண்டுகளுக்கு முன் கட்டிய கட்டடத்தில் ஊராட்சி அலுவலகம் இயங்குகிறது. பிரதான சாலையையொட்டி ஊராட்சி அலுவலகம் அமைந்துள்ளதால், அவ்வப்போது சாலை சீரமைப்பு போன்றவையால் சாலையின் மட்டத்தில் இருந்து அலுவலக கட்டடம் தாழ்வாக உள்ளது.
மேலும், அலுவலக கட்டடம் மிகவும் பழுதடைந்து, மழைக்காலத்தில் நீர் கசிந்து வருகிறது. அச்சமயங்களில் அலுவலக கோப்புகளை பாதுகாப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.
அய்யம்பேட்டை ஊராட்சி அலுவலகம் இடநெருக்கடியில் இயங்குவதால், கூட்டங்கள் நடத்துவதிலும், பலவகை வரி இனங்கள் கட்ட வரும் மக்களும், இடநெருக்கடிக்கு சிக்கி தவிக்கின்றனர்.
எனவே, அய்யம்பேட்டை ஊராட்சியில் இயங்கும் பழுதான அலுவலகத்திற்கு மாற்றாக, புதிய கட்டட வசதி ஏற்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.