/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
களக்காட்டூர் ஏரியில் முளைத்துள்ள கடற்பாலை செடிகள் அகற்றப்படுமா?
/
களக்காட்டூர் ஏரியில் முளைத்துள்ள கடற்பாலை செடிகள் அகற்றப்படுமா?
களக்காட்டூர் ஏரியில் முளைத்துள்ள கடற்பாலை செடிகள் அகற்றப்படுமா?
களக்காட்டூர் ஏரியில் முளைத்துள்ள கடற்பாலை செடிகள் அகற்றப்படுமா?
ADDED : செப் 22, 2024 02:18 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், களக்காட்டூர் ஏரி நீரை பயன்படுத்தி களக்காட்டூர், சேனியநல்லுார், கனிகிலுப்பை உள்ளிட்ட கிராமத்தினர் 500 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து வருகின்றனர்.
தற்போது ஏரியில் கடற்பாலை செடிகள் காடுபோல வளர்ந்து வருவதால் நீர்பிடிப்பு பகுதி வெகுவாக குறைந்து வருகிறது. இதனால், வடகிழக்கு பருவமழைக்கு ஏரி முழுமையாக நிரம்பினாலும் குறைந்த அளவு தண்ணீரே சேகரமாகும் நிலை உள்ளது.
எனவே, ஏரியில் காடுபோல வளர்ந்துள்ள கடற்பாலை செடிகளை அகற்றவும், ஏரியில் துார்ந்த நிலையில் மதகை சீரமைக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, களக்காட்டூர் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.