/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இடநெருக்கடியில் சீயமங்கலம் சுடுகாடு ஒட்டிவாக்கத்திற்கு தனியாக அமையுமா?
/
இடநெருக்கடியில் சீயமங்கலம் சுடுகாடு ஒட்டிவாக்கத்திற்கு தனியாக அமையுமா?
இடநெருக்கடியில் சீயமங்கலம் சுடுகாடு ஒட்டிவாக்கத்திற்கு தனியாக அமையுமா?
இடநெருக்கடியில் சீயமங்கலம் சுடுகாடு ஒட்டிவாக்கத்திற்கு தனியாக அமையுமா?
ADDED : டிச 23, 2024 01:55 AM

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம் திம்மராஜம்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்டது சீயமங்கலம் கிராமம். இக்கிராமத்திற்கான சுடுகாடு அப்பகுதி பாலாற்றங்கரையை ஒட்டி அமைந்துள்ளது. சீயமங்கலம் அடுத்து ஒட்டிவாக்கம் கிராமம் உள்ளது.
ஒட்டிவாக்கம் கிராமத்தில் இறந்தவர்களின் சடலங்களை, சில ஆண்டுகளாக சீயமங்கலம் சுடுகாட்டில் அடக்கம் செய்கின்றனர். இதனால், இறந்தோர் நினைவாக கட்டப்படும் கல்லறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து, தற்போது இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது.
எனவே, ஒட்டிவாக்கம் கிராமத்தினர் தங்கள் பகுதியில் உள்ள சுடுகாட்டை பயன்படுத்தி, இறந்தோர் சடலங்களை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சீயமங்கலம் பகுதிவாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து சீயமங்கலம் கிராமவாசிகள் கூறியதாவது:
ஒட்டிவாக்கம் கிராமத்திற்கு தனி சுடுகாடு இருந்தும், அப்பகுதியினர் தொடர்சியாக சீயமங்கலம் மயானத்தை பயன்படுத்தும் நிலை உள்ளது.
சீயமங்கலம் சுடுகாட்டில் இடநெருக்கடி ஏற்படாமல் தவிர்க்கும் வகையில், கல்லறைகள் ஏதும் கட்டக்கூடாது என, முன்னோர் காலந்தொட்டு கடைப்பிடித்து வருகிறோம்.
ஆனால், ஒட்டிவாக்கம் கிராமத்தினர், தங்களது உறவினர் சடலங்களை புதைத்த இடங்களில், தொடர்ந்து கல்லறைகள் எழுப்பி வருகின்றனர். இதனால், சீயமங்கலம் சுடுகாட்டில் கடும் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, கடந்தாண்டு அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் இரு கிராமத்தினர் இணைந்து, முத்தரப்பு பேச்சுவார்த்தை செய்தும் தீர்வு ஏற்படாமல் உள்ளது.
எனவே, ஒட்டிவாக்கம் கிராமத்தினர், தங்களுக்கான மயானத்தை முறையாக பயன்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அறிவுறுத்தி, இப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

