/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூர் குப்பை கிடங்கு மீண்டும் பயன்பாட்டிற்கு வருமா?
/
உத்திரமேரூர் குப்பை கிடங்கு மீண்டும் பயன்பாட்டிற்கு வருமா?
உத்திரமேரூர் குப்பை கிடங்கு மீண்டும் பயன்பாட்டிற்கு வருமா?
உத்திரமேரூர் குப்பை கிடங்கு மீண்டும் பயன்பாட்டிற்கு வருமா?
ADDED : நவ 18, 2024 01:39 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், அனுமந்தண்டலம் ஊராட்சியில், தூய்மை பணியாளர்களை கொண்டு குப்பை சேகரிக்கப்பட்டு வருகிறது.
இங்கு சேகரமாகும் குப்பையை மட்கும் மற்றும் மட்காதவை என தரம் பிரிக்க, 2021- - 2022ம் நிதியாண்டில், 15வது நிதிக்குழு மானிய திட்டத்தில், 1.30 லட்சம் ரூபாய் செலவில், குப்பை தரம் பிரிக்கும் கூடம் கட்டப்பட்டது.
தற்போது, முறையான பராமரிப்பு இல்லாததால், குப்பை தரம் பிரிக்கும் கூடம், பயன்பாட்டில் இல்லாத நிலை உள்ளது. மேலும், சேகரிக்கப்படும் குப்பையை சாலையோரத்தில் கொட்டுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
எனவே, குப்பை தரம் பிரிக்கும் கூடத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.