/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பெருநகரில் சமுதாய கூடம் அமையுமா?
/
பெருநகரில் சமுதாய கூடம் அமையுமா?
ADDED : பிப் 13, 2025 08:14 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம் பெருநகர் ஊராட்சியில், அகஸ்தியப்பா நகர், சேத்துப்பட்டு, மேட்டூர், எம்.ஜி.ஆர்., நகர் ஆகிய துணை கிராமங்கள் உள்ளன. இங்கு, 5,000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
பெருநகர் பகுதியில் சமுதாய கூடம் இல்லாததால், அப்பகுதி வாசிகள் சுப நிகழ்ச்சிகளை நடத்த, பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து, தனியார் மண்டபங்களில் நடந்துகின்றனர். மண்டபங்களில் நிகழ்ச்சி நடத்த முடியாத ஏழை மக்கள், கோவில்களில் நடத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.
மேலும், உத்திரமேரூர், மானாம்பதி பகுதிகளில் நடக்கும் சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்று, வீடு திரும்ப அப்பகுதி வாசிகள் கடும் சிரமப்படுகின்றனர். எனவே, பெருநகரில் சமுதாய கூடம் அமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.