/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
எரிவாயு தகனமேடை அமையுமா? வாலாஜாபாதில் அமைக்க கோரிக்கை
/
எரிவாயு தகனமேடை அமையுமா? வாலாஜாபாதில் அமைக்க கோரிக்கை
எரிவாயு தகனமேடை அமையுமா? வாலாஜாபாதில் அமைக்க கோரிக்கை
எரிவாயு தகனமேடை அமையுமா? வாலாஜாபாதில் அமைக்க கோரிக்கை
ADDED : ஜன 31, 2025 08:25 PM
வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில், 20,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மேலும், வாலாஜாபாத் சுற்றுவட்டாரத்தில் இயங்கும் தனியார் தொழிற்சாலைகளில் பணியாற்றும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர், வாலாஜாபாதில் வாடகை வீடுகளில் தங்கியுள்ளனர்.
வாலாஜாபாத் பேரூராட்சியில் உயிரிழந்தோரின் சடலங்களை, பேரூராட்சிக்கு உட்பட்ட வெள்ளேரியம்மன் கோவில், சேர்க்காடு மற்றும் கீழாண்டை வீதி ஆகிய பகுதிகளில் உள்ள பொது சுடுகாடுகளில் அடக்கம் செய்து வருகின்றனர்.
இந்த மயானங்கள் பாலாற்றங்கரையை ஒட்டி அமைந்துள்ளதால், பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, மண்ணில் புதைத்த சடலங்கள் தண்ணீரில் அடித்து செல்லும் அவலநிலை உள்ளது. இதனால், தண்ணீர் மாசு அடைவதோடு, பாலாற்றில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
மேலும், வாலாஜாபாத் பேரூராட்சியில் உள்ள மயானங்களில் இறந்தோர் நினைவாக கல்லறைகள் அதிகம் கட்டப்படுவதால், தொடர்ந்து இடப்பற்றாக்குறை பிரச்னை நிலவுகிறது. இதனால், வாலாஜாபாத் பேரூராட்சி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்கு, வாலாஜாபாத் பகுதியில் நவீன எரிவாயு தகனமேடை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.