/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாலாஜாபாதில் ஆவின் கொள்முதல் நிலையம் அமையுமா?
/
வாலாஜாபாதில் ஆவின் கொள்முதல் நிலையம் அமையுமா?
ADDED : டிச 17, 2024 01:02 AM
வாலாஜாபாத்,வாலாஜாபாத் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், ஏராளமானோர் கால்நடை வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக பசு, எருமை மாடுகள் அதிகளவில் வளர்த்து வருகின்றனர்.
இப்பகுதியில் வசிக்கும் பலருக்கு, பால் உற்பத்தி தொழில் சிறந்த வருவாய்ஆதாரமாக உள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில் மாடுகள் வாயிலாக கறக்கும் பாலை, தனியார்கொள்முதல் நிலையத்திற்கு கொண்டுசென்று விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில்,தனியார் பால் கொள் முதல் நிலையங்களில்,கால்நடை விவசாயிகளிடம் இருந்து குறைந்த அளவேபால் கொள்முதல்செய்வதோடு,பொதுமக்களுக்குஅதிகளவில் பால்விற்பனைசெய்யப்படுவதாக கூறப்படுகிறது.
புண்ணாக்கு,தவிடு போன்ற மாட்டு தீவனத்திற்கானவிலைகள் உயர்ந்துள்ள நிலையில், தனியார் கொள்முதல் நிலையத்தில் பாலுக்குபோதுமான விலை கிடைக்கவில்லைஎன, இப்பகுதிகால்நடை விவசாயிகள் புலம்புகின்றனர்.
எனவே, வாலாஜாபாத் பகுதியில்ஆவின் பால் கொள் முதல் நிலையம்துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்என, கால்நடைவிவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

