/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இரும்பு கம்பியால் கணவர் தாக்கியதில் சிகிச்சை பெற்று வந்த பெண் பலி
/
இரும்பு கம்பியால் கணவர் தாக்கியதில் சிகிச்சை பெற்று வந்த பெண் பலி
இரும்பு கம்பியால் கணவர் தாக்கியதில் சிகிச்சை பெற்று வந்த பெண் பலி
இரும்பு கம்பியால் கணவர் தாக்கியதில் சிகிச்சை பெற்று வந்த பெண் பலி
ADDED : செப் 29, 2025 11:41 PM
ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடத்தில், கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட தகராறில், இரும்பு கம்பியால் தாக்கி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண், உயிரிழந்தார்.
ஸ்ரீபெரும்புதுார் அருகே, ஒரகடத்தைச் சேர்ந்தவர் நந்தகுமார், 26. அதே பகுதியில் மரக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி ஷாலினி, 23. தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
நந்தகுமார் அடிக்கடி வீட்டிற்கு மது அருந்திவிட்டு வருவதால், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த 25ம் தேதி இரவு, இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில், நந்தகுமார் இரும்பு கம்பியால் ஷாலினி தலையில் அடித்துள்ளார்.
இதையடுத்து, ஷாலினி, காஞ்சிபுரத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த நிலையில், நேற்று முன்தினம் தீவிர தலைவலி ஏற்பட்ட நிலையில், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று உயிரிழந்தார். ஒரகடம் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, தலைமறைவாக உள்ள நந்தகுமாரை தேடி வருகின்றனர்.