ADDED : மார் 15, 2026 05:50 AM
அ நிறம் | அளவு
காஞ்சிபுரம்:வெவ்வேறு இடங்களில், மகளிர் தின விழா கொண்டாடப்பட்டன.
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில், உலக மகளிர் தின விழா நடந்தது. காஞ்சிபுரம் ஆரிய வைசிய சமாஜம் மண்டபத்தில், நேற்று நடந்த மகளிர் தின விழாவிற்கு, மாநில துணை தலைவர் வாசுகி தலைமை வகித்தார்.
சங்க மாநில செயலர் அரவிந்தன், காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் அமிர்தகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, வாழ்த்துரை வழங்கினார். மாநில மகளிர் அணி செயலர் மணிமேகலை வரவேற்றார்.
இதேபோல, தேவரியம்பாக்கம் ஊராசட்சி குறுங்காட்டிலும், அதன் தலைவர் அஜய்குமார் தலைமையில், மகளிர் தின விழா கொண்டாடப்பட்டன.
