/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தேனீ பயிற்சிக்கு மகளிர் குழுவினர் பதிவு செய்யலாம்
/
தேனீ பயிற்சிக்கு மகளிர் குழுவினர் பதிவு செய்யலாம்
ADDED : ஜூன் 18, 2025 09:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:தேனீ வளர்ப்பு பயிற்சிக்கு, தகுதி வாய்ந்த மகளிர் குழுவினர் பதிவு செய்து கொள்ளலாம் என, ஊராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தேவரியம்பாக்கம் ஊராட்சி தலைவர் அஜய்குமார் செய்திக்குறிப்பு:
இந்தியன் வங்கி மற்றும் தேவரியம்பாக்கம் ஊராட்சி நிர்வாகம் இணைந்து, அதே கிராம சேவை மைய கட்டடத்தில், 20 நாள் தேனீ வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்த பயிற்சியில் பங்குபெற விரும்பும் மகளிர் குழுவினர், உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் பெண்கள், 100 நாள் வேலை அட்டையுடன் ஊராட்சி அலுவலகத்தை நாடலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.