/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஹேண்ட்பால் பெண்கள் அணி காஞ்சியில் பயிற்சி முகாம் நிறைவு
/
ஹேண்ட்பால் பெண்கள் அணி காஞ்சியில் பயிற்சி முகாம் நிறைவு
ஹேண்ட்பால் பெண்கள் அணி காஞ்சியில் பயிற்சி முகாம் நிறைவு
ஹேண்ட்பால் பெண்கள் அணி காஞ்சியில் பயிற்சி முகாம் நிறைவு
ADDED : மார் 12, 2024 10:40 PM

காஞ்சிபுரம்:தேசிய அளவில், மகளிருக்கான 52வது ஹேண்ட்பால் போட்டி, தாதர் நகர், ஹாவேலி, டாமன் மற்றும் டையூ யூனியன் பிரதேசத்தில் வரும் 16 முதல் 20 வரை நடைபெற உள்ளது.
இப்போட்டியில் பங்கேற்க உள்ள ஹேண்ட்பால் தமிழக பெண்கள் அணியினருக்கான பயிற்சி முகாம், காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கில் கடந்த 9ல் துவங்கியது. இதில், தமிழக அணிக்காக தேர்வு பெற்ற 18 வீராங்கனைகயருக்கு பயிற்சியாளர்கள் பாலமுருகன், ஜெய கோபி தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டது.
முகாமின் நிறைவு நாளான நேற்று, தேசிய போட்டியில் பங்கேற்க உள்ள தமிழக ஹேண்ட்பால் அணி வீராங்கனையருக்கு சீருடை வழங்கும் விழா நடந்தது.
விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அமிர்தம் கல்வியியல் கல்லுாரி தாளாளர் ரூத் குமிழ்தினி ஜாய்ஸ் வீராங்கனையருக்கு சீருடை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மாவட்ட ஹேண்ட்பால் சங்க தலைவர் செந்தில் தங்கராஜ், செயலர் சசிகுமார், பொருளாளர் பாலமுருகன், துணை செயலர் சோமநாதன் உள்ளிட்டோர் பயிற்சியை ஒருங்கிணைத்தனர்.

