/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பெண்கள் வாலிபால் போட்டி :எஸ்.ஆர்.எம்., தொடர் வெற்றி
/
பெண்கள் வாலிபால் போட்டி :எஸ்.ஆர்.எம்., தொடர் வெற்றி
பெண்கள் வாலிபால் போட்டி :எஸ்.ஆர்.எம்., தொடர் வெற்றி
பெண்கள் வாலிபால் போட்டி :எஸ்.ஆர்.எம்., தொடர் வெற்றி
ADDED : பிப் 08, 2024 12:47 AM

சென்னை:பி.என்.எத்திராஜ் முதலியார் அறக்கட்டளை சார்பில், கல்லுாரி அணிகளுக்கான மாநில பெண்கள் வாலிபால் போட்டி, சென்னை ராணி மேரி கல்லுாரியில் நடந்து வருகிறது.
போட்டியில், எஸ்.ஆர்.எம்., - ராணிமேரி, மதுரை அமெரிக்கன் கல்லுாரி, ஈரோடு பி.கே.ஆர்., - ஜேப்பியார், வேல்ஸ் பல்கலை ஆகிய ஆறு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில், எஸ்.ஆர்.எம்., - கோபிசெட்டிபாளைம் பி.கே.ஆர்., கல்லுாரி அணிகள் மோதின.
விறுவிறுப்பான ஆட்டத்தில் எஸ்.ஆர்.எம்., 25 - 13, 25 - 17 என்ற நேர் செட்டுகளில் வெற்றி பெற்று, தொடர்ந்து நான்காவது வெற்றியை கைப்பற்றியது.
முன்னதாக நடந்த மற்றொரு 'லீக்' ஆட்டத்தில் ஜேப்பியார் 26 - 28, 22- - 25 என்ற புள்ளிகளில், பி.கே.ஆர்., அணியிடம் தோல்வியடைந்தது.
பி.கே.ஆர்., அணி ஐந்து லீக் ஆட்டங்களின் முடிவில், மூன்று வெற்றியும் இரண்டு தோல்வி கண்டுள்ளது.
வேல்ஸ் மற்றும் ராணி மேரி அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், 25- - 22, 25 - 21 என்ற புள்ளிகளில் வேல்ஸ் வெற்றி பெற்றது. வேல்ஸ் அணி நான்கு ஆட்டங்களின் முடிவில், மூன்று வெற்றியும், ஒரு தோல்வி கண்டுள்ளது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.

