/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
எஸ்.எஸ்.கே.வி., கல்லுாரி நீச்சல், கேரம் போட்டியில் வெற்றி
/
எஸ்.எஸ்.கே.வி., கல்லுாரி நீச்சல், கேரம் போட்டியில் வெற்றி
எஸ்.எஸ்.கே.வி., கல்லுாரி நீச்சல், கேரம் போட்டியில் வெற்றி
எஸ்.எஸ்.கே.வி., கல்லுாரி நீச்சல், கேரம் போட்டியில் வெற்றி
ADDED : செப் 26, 2024 12:08 AM

காஞ்சிபுரம்:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதல்வர் கோப்பை, கல்லுாரி மாணவியருக்கான, மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது.
இதில் மாவட்டம் முழுதும் 26 கல்லுாரிகள் பங்கேற்றன. இதில், 50 மீட்டர் நீச்சல் போட்டியில், கீழம்பி எஸ்.எஸ்.கே.வி., கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லுாரி மாணவியர் ஹேமசுந்தரி, கார்குழலி ஆகியோர் முதல் பரிசையும், லிதிகா இரண்டாம் பரிசையும் வென்றனர்.
இதேபோல, மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் எஸ்.எஸ்.கே.வி., கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லுாரி மாணவி தர்ஷினி ஒற்றையர் பிரிவில் முதல் பரிசையும், இரட்டையர் பிரிவில் பிரேமா, தமிழ்செல்வி ஆகியோர் முதல் பரிசையும் பெற்றனர்.
நீச்சல் மற்றும் கேரம் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியரை, கல்லுாரி முதன்மையர் ராஜகோபாலன், முதல்வர் திருமாமகள் உட்பட பலர் பங்கேற்றனர்.