/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வல்லக்கோட்டையில் நிழற்குடை ரூ.10 லட்சத்தில் பணி துவக்கம்
/
வல்லக்கோட்டையில் நிழற்குடை ரூ.10 லட்சத்தில் பணி துவக்கம்
வல்லக்கோட்டையில் நிழற்குடை ரூ.10 லட்சத்தில் பணி துவக்கம்
வல்லக்கோட்டையில் நிழற்குடை ரூ.10 லட்சத்தில் பணி துவக்கம்
ADDED : பிப் 02, 2025 12:40 AM

ஸ்ரீபெரும்புதுார்:காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வல்லக்கோட்டையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் பெற்ற இத்தலம், 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. இக்கோவிலில், 7 அடி உயரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
பல சிறப்புகள் பெற்ற இந்த கோவிலுக்கு, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரும்பாலும் அரசு பேருந்து வாயிலாக வந்து செல்கின்றனர். இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையில் உள்ள வல்லக்கோட்டை பேருந்து நிறுத்தத்தில், பயணியர் நிழற்குடை வசதி இல்லை.
இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் வெயில், மழையில் பேருந்திற்காக சாலையோரம் கால்கடுக்க காத்திருக்கும் அவலநிலை உள்ளது. முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் கடும் அவதியடைந்து வந்தனர்.
எனவே, தினமும் நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்லும் வல்லக்கோட்டை பேருந்து நிறுத்தத்தில், இருக்கை வசதியுடன் நிழற்குடை அமைக்க வேண்டும் என, பக்தர்கள், பயணியர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்படி, ஸ்ரீபெரும்புதுார் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ், 10 லட்சம் ரூபாய் மதிப்பில், இருக்கை வசதியுடன் நிழற்குடை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது, நிழற்குடை கட்டுமான பணிகள் துவங்கிய நிலையில், மார்ச் மாதம் இறுதிக்குள் கட்டுமான பணிகள் நிறைவடைந்து, பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.