/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
துார்ந்த வடிகால்வாயை துார்வாரும் பணி துவக்கம்
/
துார்ந்த வடிகால்வாயை துார்வாரும் பணி துவக்கம்
ADDED : ஜூலை 25, 2025 01:23 AM

உத்திரமேரூர்:சாலவாக்கத்தில் துார்ந்த வடிகால்வாயை ஊராட்சி நிர்வாகத்தினர், பொக்லைன் இயந்திரத்தின் மூலம் துார்வாரும் பணியில் ஈடுபட்டனர்.
உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கம் கிராமத்தில் 3,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள தெருக்களின் இருபுறமும் வடிகால்வாய் அமைக்கப்பட்டு, பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இந்த கால்வாய்களில் வீட்டு உபயோக கழிவுநீர் மற்றும் மழைநீர் வெளியேறி வருகின்றன. இந்நிலையில், பஜார் வீதியில் உள்ள வடிகால்வாய் மண்ணால் துார்ந்த நிலையில் இருந்தது.
இதனால், மழைநீர் மற்றும் வீட்டு உபயோக கழிவுநீர் வெளியேற முடியாமல் அங்கேயே தேங்கி வந்தது. அவ்வாறு தேங்கும் தண்ணீரால் அப்பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி, தொற்று நோய் ஏற்படும் அபாயம் இருந்தது.
இதனால், வடிகால்வாயை துார்வார அப்பகுதியில் வசிப்போர் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, ஊராட்சி நிர்வாகத்தினர் பஜார் வீதியில் உள்ள வடிகால்வாயை, பொக்லைன் இயந்திரத்தின் மூலம் நேற்று துார்வாரும் பணியில் ஈடுபட்டனர்.