/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
47 கிலோ தங்கம் கட்டிகளாக மாற்றும் பணி துவக்கம்
/
47 கிலோ தங்கம் கட்டிகளாக மாற்றும் பணி துவக்கம்
ADDED : பிப் 12, 2025 08:14 PM
காஞ்சிபுரம்:காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர், ஆதீன பரம்பரை தர்மகர்த்தாவாக இருக்கும் காஞ்சி காமாட்சியம்மன் கோவில் உண்டியலில் காணிக்கையாக வரப்பெற்ற மற்றும் பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்துவதற்கு இயலாத, இருப்பில் உள்ள பல மாற்று பொன் இனங்கள் 47 கிலோ 240 கிராம் உள்ளது.
இதை, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் துரைசாமி ராஜு தலைமையிலான குழுவினர் வாயிலாக, பொன் இனங்களில் உள்ள அரக்கு, அழுக்கு, கற்கள் மற்றும் பிற உலோகங்கள் ஆகியவற்றை தனித்தனியாக பிரித்து எடுக்கவும், சுத்த தங்க கட்டிகளாக மாற்றுவதற்கு ஏதுவாக தயார் நிலையில் வைக்கும் பணி நேற்று முன்தினம் கோவிலில் துவங்கியுள்ளது என, காமாட்சியம்மன் கோவில் ஸ்ரீகார்யம் சுந்தரேச ஐயர் தெரிவித்தார்.

