/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூரில் மின்னழுத்த பிரச்னையை தீர்க்க கூடுதல் மின்மாற்றி அமைக்கும் பணி தீவிரம்

ADDED : அக் 25, 2025 11:32 PM

உத்திரமேரூர்: உத்திரமேரூரில், புக்கத்துறை நெடுஞ்சாலை பகுதியில் குறைந்த மின்னழுத்த பிரச்னையை தீர்க்க, கூடுதலாக மின்மாற்றி அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
உத்திரமேரூர் பேரூராட்சி, புக்கத்துறை நெடுஞ்சாலை பகுதியில் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள், மருந்தகங்கள் ஆகியவை இயங்கி வருகின்றன.
இந்த பகுதியில் மின்வாரியத்துறையின் வாயிலாக மின் கம்பங்கள் நடப்பட்டு, மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அவ்வாறு வழங்கப்படும் மின்சாரம், அதிக நேரங்களில் குறைந்தழுத்த மின்சாரமாக உள்ளது.
இதனால், குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மின்சாதன பொருட்களை இயக்க முடியாத நிலை உள்ளது. சில நேரங்களில் மின்சாதன பொருட்கள் பழுதடைகின்றன.
எனவே, இப்பகுதி யில் குறைந்த மின்ன ழுத்த பிரச்னைக்கு தீர்வு காண, கூடுதலாக மின்மாற்றி அமைக்க பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து, புக்கத்துறை நெடுஞ்சாலை ஓரத்தில் கூடுதலாக ஒரு மின்மாற்றி அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இன்னும், இரண்டு நாட்களுக்குள் இப்பணிகள் முடிக்கப்பட்டு, புதிய மின்மாற்றி பயன்பாட்டுக்கு வரும் என, உத்திரமேரூர் மின் வாரியத்துறை அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.