/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திருப்போரூர் பஸ் நிலையம் ரூ.30 லட்சத்தில் விரிவாக்கம்
/
திருப்போரூர் பஸ் நிலையம் ரூ.30 லட்சத்தில் விரிவாக்கம்
திருப்போரூர் பஸ் நிலையம் ரூ.30 லட்சத்தில் விரிவாக்கம்
திருப்போரூர் பஸ் நிலையம் ரூ.30 லட்சத்தில் விரிவாக்கம்
ADDED : ஜூலை 25, 2011 02:01 AM
திருப்போரூர்:திருப்போரூர் பஸ் நிலையத்தை, 30 லட்ச ரூபாய் மதிப்பில்
விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.சென்னை தி.நகர், பாரிமுனை,
கீழ்கட்டளை, தாம்பரம், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம்,
பகுதிகளிலிருந்து, திருப்போரூருக்கு, 32 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
பஸ்கள்
நின்று செல்ல, பழைய மாமல்லபுரம் சாலையையொட்டி, இரண்டு ஏக்கர் பரப்பில்,
வணிக வளாகங்களுடன் பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பயணிகள் அமர
இருக்கை வசதிகள், நேர காப்பாளர் அலுவலகங்கள் உள்ளன.தற்போதைய பஸ்
நிலையத்தின் பின்புறம் காலியாக இருந்த இடத்தில், பஸ்கள் நின்று செல்வதற்கு
வசதியாக, தற்போது, 20 லட்ச ரூபாய் செலவில், சிமென்ட் தரைதளம்
அமைக்கப்படுகிறது. அதேபோல், பஸ் நிலையம் முன்புறம், நெடுஞ்சாலைத்துறை
அனுமதியுடன், 10 லட்ச ரூபாய் செலவில் சிமென்ட் தரைதளம் அமைக்கும் பணியும்
துவக்கப்பட்டுள்ளது.இது குறித்து, செயல் அலுவலர் கேசவன் கூறும்போது,
''பேரூராட்சிக்கு வருவாய் ஈட்டுவதற்காக, வணிக வளாகங்கள் அமைத்துள்ளோம்.
தினசரி வியாபாரிகள் பயன் பெற, ஒரு நாளைக்கு, 20 ரூபாய் வாடகையில், 10
கடைகள் கட்டியுள்ளோம். பஸ் நிலையத்தை விரிவாக்க, சிமென்ட் தளம்
அமைக்கப்படுகிறது. இப்பணி, 15 நாட்களில் நிறைவு பெறும். சாலையோர
ஆக்கிரமிப்பை தவிர்க்க, ஆட்டோ, வேன்கள் நிறுத்த, மாற்று இடம் தேர்வு செய்ய
உள்ளோம். ஆலத்தூர் ஆர்கிட் நிறுவனம் மூலம், பயணிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட
குடிநீர் வழங்க திட்டம் தயாரித்துள்ளோம்'' என்றார்.