ADDED : பிப் 27, 2024 06:16 AM
அ நிறம் | அளவு
உத்திரமேரூர் : உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வேடபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மேகநாதன், 49. கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
சில நாட்களாக, மேகநாதன் துாசி கிராம பகுதியில் தங்கி அங்கு கூலி வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, உத்திரமேரூர் ஏரிக்கரை பகுதி புளியமரம் ஒன்றில், தூக்கில் தொங்கிய ஆண் சடலத்தை அப்பகுதியினர் கண்டனர்.
உத்திரமேரூர் போலீசார் இறந்தவரை மீட்டபோது அவர் மேகநாதன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இறந்ததற்கான காரணங்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
