நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:உலக புத்தக தின விழாவையொட்டி, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெருவில் அமைந்துள்ள நேரு கிளை நுாலகத்தில், வாசகர் வட்டத்தின் சார்பில், புத்தகம் படிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நேற்று நடந்தது. நுாலகர் கலா தலைமை வகித்தார். வாசகர் வட்டத்தின் மூத்த உறுப்பினர் ரங்கநாதன் முன்னிலை வகித்தார்.
வாசகர் வட்டத்தின் தலைவர் கந்தன் வரவேற்றார். வாசகர் வட்டத்தின் கவுரவ தலைவர் ராணி செல்வராஜ் புத்தகங்களை பரிசாக வழங்கினார்.
சாந்தகுமார், திருவிற்கோலம் ஆகியோர், வாழ்வின் உயர்வுக்கு புத்தகங்கள் எவ்வாறு காரணமாகிறது என்ற தலைப்பில் பேசினர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் மரக்கன்று இலவசமாக வழங்கப்பட்டன.