/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மின்விளக்கு இல்லாத மஞ்சள்நீர் கால்வாய் பாலம்
/
மின்விளக்கு இல்லாத மஞ்சள்நீர் கால்வாய் பாலம்
ADDED : டிச 05, 2024 01:51 AM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாநகராட்சி 22வது வார்டு திருக்காலிமேடு பகுதிக்கும், 23வது வார்டு நேதாஜி நகருக்கும் இடையே செல்லும் மஞ்சள்நீர் கால்வாயின் குறுக்கே சிறுபாலம்கட்டப்பட்டுள்ளது.
இப்பாலத்தின் வழியாகசின்ன காஞ்சிபுரம், ரயில் நிலையம், பேருந்து நிலையம், மாமல்லன் நகர், ஆனந்தாபேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு, தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர்.
வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் நிறைந்த இந்த சிறு பாலத்தில், தெருமின்விளக்கு வசதி ஏற்படுத்தப்படவில்லை. இதனால், இரவு நேரத்தில் இச்சாலையில் செல்லும் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும்சூழல் உள்ளது.
மேலும், பணி முடிந்து வீடு திரும்பும் பெண்கள், சிறுபாலத்தை கடக்கும்போது அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
எனவே, மஞ்சள்நீர் கால்வாய் சிறுபாலத்தில், தெரு மின் விளக்கு வசதி ஏற்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.