/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பட்டய கணக்காளர் தேர்வுக்கு பயிற்சி தாட்கோ மூலம் விண்ணப்பிக்கலாம்
/
பட்டய கணக்காளர் தேர்வுக்கு பயிற்சி தாட்கோ மூலம் விண்ணப்பிக்கலாம்
பட்டய கணக்காளர் தேர்வுக்கு பயிற்சி தாட்கோ மூலம் விண்ணப்பிக்கலாம்
பட்டய கணக்காளர் தேர்வுக்கு பயிற்சி தாட்கோ மூலம் விண்ணப்பிக்கலாம்
ADDED : நவ 05, 2024 07:25 PM
காஞ்சிபுரம்:'தாட்கோ' எனப்படும் ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் வாயிலாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த மாணவர்களுக்கு, பட்டய கணக்காளர், நிறுவன செயலர், செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர் ஆகிய போட்டி தேர்வுகளில் தேர்ச்சி பெற பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
தாட்கோ நடவடிக்கை காரணமாக, சென்னையில் உள்ள முன்னணி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து, 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு பட்டய கணக்காளர் உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இப்பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள், இளநிலை வணிகவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
மாணவர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வசதிகள் ஏற்பாடு செய்யப்படும். தகுதியுள்ள மாணவர்கள் இப்பயிற்சியில் சேர www.tahdco.com வாயிலாக பதிவு செய்யலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.