/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்
/
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூலை 26, 2025 02:30 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு, கட்டுமான தொழிலாளர்களின் பிள்ளைகள் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திகுறிப்பு :
காஞ்சிபுரத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் புதிதாக துவங்கப்பட்டுள்ளது. இந்நிலையத்தில் பல்வேறு தொழிற்பிரிவுகளுக்கு 2025ம் ஆண்டுக்கான நேரடி சேர்க்கை நடைபெறுகிறது.
இத்தொழிற்பயிற்சி நிலையம், கட்டுமான தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு மட்டுமே என்பதால் எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற கட்டுமான தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களின் குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்கும்போது கட்டுமான தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் அட்டை தவறாமல் கொண்டுவர வேண்டும். சேர்க்கையில் சேர விரும்புவோர் 8ம் வகுப்பு, பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ், போட்டோ உள்ளிட்ட ஆவணங்களின் அசல், நகல்களுடன் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில், உள்ள சேர்க்கை உதவி மையத்தை அணுகலாம். மேலும் விவரங்களுக்கு 94990 56275, 90477 56987, 044- 29894560 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.