/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'டிஜிட்டல் உயிர் வாழ்' சான்று பெற தபால்காரர்களை அணுகலாம்
/
'டிஜிட்டல் உயிர் வாழ்' சான்று பெற தபால்காரர்களை அணுகலாம்
'டிஜிட்டல் உயிர் வாழ்' சான்று பெற தபால்காரர்களை அணுகலாம்
'டிஜிட்டல் உயிர் வாழ்' சான்று பெற தபால்காரர்களை அணுகலாம்
ADDED : நவ 15, 2025 11:32 PM
காஞ்சிபுரம்: 'டிஜிட்டல் உயிர் வாழ்' சான்று, தபால்காரர்கள் வாயிலாக பெறலாம் என, அஞ்சல் துறை அறிவித்துள்ளது.
காஞ்சிபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அருள்தாஸ் வெளியிட்ட செய்தி அறிக்கை:
'இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கி' ஓய்வூதியதாரர்களின் வீட்டு வாசலிலேயே, 'பயோமெட்ரிக்' தொழில்நுட்ப நடைமுறையை பயன்படுத்தி, 'டிஜிட்டல் உயிர் வாழ்' சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு சேவை கட்டணமாக, 70 ரூபாயை தபால்காரரிடம் செலுத்த வேண்டும். ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரர்களிடம் ஆதார், மொபைல்போன் எண், ஓய்வூதிய வங்கி கணக்கு விபரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகை பதிவு செய்து, 'டிஜிட்டல் உயிர் வாழ்' சான்றிதழை சமர்ப்பித்து பயன் பெறலாம்.
எனவே, மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ஓய்வூதியதாரர்கள், ராணுவ ஓய்வூதியதாரர்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

