தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/'யு டியூப்' சேனல் துவக்க பயிற்சி

'யு டியூப்' சேனல் துவக்க பயிற்சி

'யு டியூப்' சேனல் துவக்க பயிற்சி


ADDED : ஜன 20, 2024 11:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 20, 2024 11:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, சொந்தமாக, 'யு டியூப்' சேனல் உருவாக்குதல், இணையதளத்தில் யு டியூப் சேனலை பயன்படுத்தி தங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்துதல் குறித்து மூன்று நாள் பயிற்சி வகுப்பு, சென்னையில் நடக்க உள்ளது.

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், இப்பயிற்சியை அளிக்கிறது.

சமூக ஊடக சந்தைப்படுத்தல், வாடிக்கையாளர் நெட்வொர்க்கை அதிகரிப்பது, பயனுள்ள சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பு, ஆன்லைன் மார்கெட்டிங் மற்றும் விதிகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

வரும் 29 முதல் 31ம் தேதி வரை, தினமும் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, பயிற்சி வகுப்பு நடக்க உள்ளது. கட்டணம் 4,000 ரூபாய்.

ஆர்வம் உடைய தொழில் முனைவோர், 18 வயதுக்கு மேற்பட்ட, குறைந்தபட்சம் 10ம் வகுப்பு கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விபரங்களைப் பெற விரும்புவோர், www.editn.inஇணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் அல்லது 044 - 2225 2081, 2225 2082, 86681 02600, 86681 00181, 70101 43022 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us