/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
15 வயது சிறுமியை திருமணம் செய்து துன்புறுத்திய வாலிபர் கைது
/
15 வயது சிறுமியை திருமணம் செய்து துன்புறுத்திய வாலிபர் கைது
15 வயது சிறுமியை திருமணம் செய்து துன்புறுத்திய வாலிபர் கைது
15 வயது சிறுமியை திருமணம் செய்து துன்புறுத்திய வாலிபர் கைது
ADDED : டிச 07, 2024 08:45 PM
காஞ்சிபுரம்:உத்திரமேரூர் பேரூராட்சியில், காந்தி தெருவில் வசிப்பவர் ஜேம்ஸ், 26. இவரும், அதே ஊரில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும், 15 வயது சிறுமியும் காதலித்து வந்தனர்.
இந்த விவகாரம், சிறுமியின் தாயாருக்கு தெரியவந்ததால், சிறுமியை கண்டித்துள்ளார். இந் நிலையில், கடந்தாண்டு நவம்பர் மாதம், சிறுமியை அழைத்துக்கொண்டு சென்ற ஜேம்ஸ், திடீரென திருமணம் செய்து கொண்டார்.
தனது வீட்டிற்கு அழைத்து சென்றவர், சிறுமியுடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார். இதை அடுத்து, சிறுமியை அடித்து துன்புறுத்தியதால், தனது பாட்டி வீட்டிற்கு சிறுமி சென்றுவிட்டார்.
இந்நிலையில், சிறுமியின் பாட்டி வீட்டிற்கு சென்ற ஜேம்ஸ், தன்னுடன் வர சிறுமியை அழைத்துள்ளார். அவர் வர மறுத்ததால், சிறுமியை அடித்து தாக்கியுள்ளார்.
இதுபற்றி, காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், சிறுமி அளித்த புகாரின்படி, போக்சோ சட்டத்தில் ஜேம்ஸ் கைது செய்யப்பட்டு, சிறையில் போலீசார் அடைத்தனர்.