/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் கஞ்சா விற்ற வாலிபருக்கு குண்டாஸ்
/
காஞ்சியில் கஞ்சா விற்ற வாலிபருக்கு குண்டாஸ்
ADDED : நவ 20, 2025 04:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்: கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட வாலிபர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம், சதாவரம் பகுதியில் உள்ள கோட்டைவாசல் தெருவைச் சேர்ந்தவர் ராஜா மகன் ஈஸ்வரன்,26. இவர் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், கஞ்சா விற்றதாக, காஞ்சி தாலுகா போலீசார் கைது செய்து, வேலுார் சிறையில் அடைத்துள்ளனர்.
இவரை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய, எஸ்.பி.,சண்முகம், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டதன்பேரில், ஈஸ்வரன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை, போலீசார் சிறையில் உள்ள ஈஸ்வரனிடம் வழங்கினர்.

