ADDED : ஜூலை 25, 2025 10:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்ற வாலிபரை, உத்திரமேரூர் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா, காழியூர் கிராமத்தை சேர்ந்தவர் சுஜிபர், 20. இவர், உத்திரமேரூரை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் இன்ஸ்டாகிராமில் பழகி வந்தார்.
இந்நிலையில், சுஜிபர் கடந்த 8ம் தேதி அந்த சிறுமியை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் உத்திரமேரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின்படி, போலீசார் வாலிபரின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, இருவரும் தலைமறைவாகி விட்டனர்.
இதையடுத்து, நேற்று காழியூர் பகுதியில் சிறுமியுடன் இருந்த வாலிபரை பிடித்த போலீசார், போக்சோ வழக்கில் கைது செய்தனர். சிறுமியைபெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.