/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மின்கம்பத்தில் பழுது நீக்கும் போது மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
/
மின்கம்பத்தில் பழுது நீக்கும் போது மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
மின்கம்பத்தில் பழுது நீக்கும் போது மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
மின்கம்பத்தில் பழுது நீக்கும் போது மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
ADDED : ஜூலை 20, 2025 10:21 PM
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே, தொழிற்சாலையில் ஏற்பட்ட மின்தடையை சரிசெய்ய, மின் கம்பத்தில் ஏறி பழுது பார்த்த, தனியார் நிறுவன ஊழியர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்தவர் யூசுப், 21; ஸ்ரீபெரும்புதுார் அருகே, வெங்காடு பகுதியில் வாடகை வீட்டில் தங்கி, அதே பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் எலக்ட்ரிக்கல் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை, ஸ்ரீபெரும்புதுார் சுற்றுவட்டாரத்தில் பெய்த மழையினால், வெங்காடு பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் மின்தடை ஏற்பட்டது.
இந்த நிலையில், தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட மின் தடையை சரிசெய்ய, தொழிற்சாலை வெளியில் உள்ள மின் கம்பத்தில் ஏறி, மின் இணைப்பை சரிசெய்யும் முயற்சியில் யூசப் ஈடுபட்டார். அப்போது, எதிர்பாராத விதமாக, யூசப் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஸ்ரீபெரும்புதுார் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.