/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கல் குவாரியில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு
/
கல் குவாரியில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு
ADDED : ஜூலை 02, 2025 11:32 PM

ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் அருகே, கைவிடப்பட்ட கல் குவாரியில் வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் முஷமது அஷ்மில், 19. ஒரகடம் அடுத்த வாரணவாசியில் தங்கி, அதே பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை, முஷமது அஷ்மில் தனது நண்பர்களுடன் குன்னவாக்கத்தில் உள்ள கல் குவாரிக்கு குளிக்க சென்றார். குளித்து கொண்டிருக்கும் போது, மூச்சு திணறல் ஏற்பட்டு முஷமது அஷ்மில் தண்ணீரில் மூழ்கி மாயமானார்.
இதுகுறித்து, ஸ்ரீபெரும்புதுார் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள், நேற்று மாலை முஷமது அஷ்மில் உடலை மீட்டனர்.
ஒரகடம் போலீசார் உடலை ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனர்.