/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
எருமையூர் கல்குவாரியில் மூழ்கிய இளைஞர் மாயம்
/
எருமையூர் கல்குவாரியில் மூழ்கிய இளைஞர் மாயம்
ADDED : மார் 23, 2025 10:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார்:சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன், 28, இவர், குன்றத்துாரில் நண்பர்களுடன் தங்கி இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.
நேற்று மாலை, பாலமுருகன் நண்பர்களுடன் குன்றத்துார் அருகே உள்ள எருமையூரில் உள்ள கல்குவாரியில் குளிக்க சென்றார். எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி மாயமானார்.
சோமங்கலம் போலீசார் மற்றும் படப்பை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மாயமான பாலமுருகனை தேடி வருகின்றனர்.