/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தலையில் காயங்களுடன் வாலிபர் மீட்பு
/
தலையில் காயங்களுடன் வாலிபர் மீட்பு
ADDED : பிப் 17, 2025 03:06 AM
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் - குன்றத்துார் சாலையில், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த பென்னலுார் அருகே, நேற்று முன்தினம் இரவு, தலையில் வெட்டு காயங்களுடன் வாலிபர் ஒருவர் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதாக, அவ்வழியாக சென்றவர்கள் ஸ்ரீபெரும்புதுார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு சென்ற போலீசார், வெட்டு காயங்களுடன் இருந்த நபரை மீட்டு, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.
விசாரணையில் அவர், சுங்குவார்சத்திரத்தை அடுத்த பாப்பங்குழி கிராமத்தை சேர்ந்த திலிப், 35, என்பதும், நேற்று முன்தினம் இரவு நண்பர்களுடன் மது அருந்திவிட்டு, பைக்கில் பென்னலுார் வந்ததும் தெரிந்தது.
தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.