/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
படப்பையில் நாளை இளைஞர் திறன் திருவிழா
/
படப்பையில் நாளை இளைஞர் திறன் திருவிழா
ADDED : பிப் 15, 2024 09:36 PM
காஞ்சிபுரம்:குன்றத்துார் வட்டாரத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில், இளைஞர் திறன் திருவிழா மற்றும் வேலைவாய்ப்பு முகாம், நாளை, படப்பை ராசி பொறியியல் கல்லுாரியில் நடைபெறுகிறது.
தீன தயாள் உபத்யாய கிராமின் கெளசல்யா யோஜனா திட்டத்தின் கீழ், 18 - 35 வயது வரையுள்ள ஆண், பெண் என இருபாலரும் இதில் பங்கேற்கலாம்.
தேர்வு செய்வோருக்கு திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு வழங்கப்படும். நாளை நடைபெறும் முகாம், காலை 9:00 மணி முதல் 3:00 மணி வரை நடைபெற உள்ளது.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு முடித்தவர்கள் பங்கேற்று பயனடையலாம் என காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்து உள்ளார்.